தமிழக செய்திகள்

ரிஷிவந்தியம், கச்சிராயப்பாளையம் பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் வழங்கினர்

ரிஷிவந்தியம் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் வழங்கினர்.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அரசு பள்ளி

ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அசோக்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முரளிதரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 492 மாணவ- மாணவிகளுக்கு ரூ.25 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜூ, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வினிதாமகேந்திரன், கிருஷ்ணபிரசாத், சுதா தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கீழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 252 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 293 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான ஜெயவேல், துணை தலைவர் தண்டபாணி, கல்வி மற்றும் மேலாண்மை குழு தலைவர் வெண்ணிலா பச்சையப்பன், வளர்ச்சிக்குழு தலைவர் சின்னசாமிபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ராணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு 293 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சம்பத், குமரன், முத்து மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு