தமிழக செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

புளியங்குடி இந்து நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

புளியங்குடி:

புளியங்குடி இந்து நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உறவின்முறை கமிட்டி செயலாளர் விவேகானந்தன், பள்ளி கமிட்டி பொருளாளர் மாரியப்பன், நாட்டாண்மைகள் ராஜபாண்டி, மாரியப்பன், கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கம் வரவேற்று பேசினார்.

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், நகரசபை தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். விழாவில் பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் அண்ணப்ப ராஜா, ராமச்சந்திரன், பொருளாளர் சரவணகுமார், என்ஜினீயர் மாணிக்கம், ம.தி.மு.க. நகர செயலாளர் ஜாகிர் உசேன், ராஜாராம், உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன், மனோகரன், ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், வெள்ளத்துரை, பாலமுருகன், மாதவராஜ், பன்னீர்செல்வி, சோபனா, உமா உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சரவணக்குமார் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...