தமிழக செய்திகள்

விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

தினத்தந்தி

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் ம.தி.மு.க. கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேட்ரிக், பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துமலர், பள்ளியின் பொருளாளர் மஜீத் கான், வார்டு உறுப்பினர்கள் சரண்யா, மணிமேகலை, பள்ளி எஸ்.எம்.சி. தலைவி பிரகாசி, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை ஜெயசுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 62 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை