சென்னை,
தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முழுமையாக நிறைவடையும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 26,384 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 60,777 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 8,905 மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 8,221 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பணிகள் ஏப்ரல் மாத்திற்குள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.