தமிழக செய்திகள்

கிராம கோவில்களுக்குஇலவச மின்சாரம்

கிராம கோவில்களுக்குஇலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பூசாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் செயல்படாமல் முடங்கிக்கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி விரைவாக செயல் படுத்த வேண்டும், அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும், கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது