தமிழக செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

திருப்பத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இந்திய மருத்துவ கழகம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் இந்திய மருத்துவ கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் எல்.ஆனந்தன் தலைமை வகித்தார். ஏலகிரி செல்வம் வரவேற்றார். வி.கே.ஆனந்த் முன்னிலை வகித்தார்.

கண் சிகிச்சை முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார். இந்திய மருத்துவ சங்க திருப்பத்தூர் கிளை செயலாளர் டாக்டர் வி.வினோதினி, தலைவர் பி.பிரபாகரன், பொருளாளர் வி.வேல்முருகன், டாக்டர் லீலா சுப்ரமணியம், கே.பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 25 பேர் இலவச அறுவை சிகிச்சை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் எராளமான ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் செயலாளர் என்.சங்கர் நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்