தமிழக செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

ஜோலார்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் இருந்து 460 பேர் முகாமில் பங்கேற்றனர். தனியார் மருத்துவக் குழுவினர் மூலம் கண்களை பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் மருந்து மாத்திரைகள் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

இதில் 42 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...