தமிழக செய்திகள்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குடியாத்தம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குடியாத்தம் ரோட்டரி சங்கம், நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மருத்துவமனை, கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அமரர் மு.க.மெய்ஞானம்- வசந்தி அம்மாள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.

முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.மேகராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் கே.எம்.ராஜேந்திரன், இயக்குனர் பாபு,தலைவர் (தேர்வு) ரங்காவாசுதேவன், சி.கண்ணன், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண் சிகிச்சை முகாமை கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் ஆர்.கே.மகாலிங்கம், செ.கு.வெங்கடேசன், அரிகிருஷ்ணன், அன்பு அன்பரசன் உள்பட ஏராளமான ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

முகாமில் 650 பேர் கண் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 250 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்