தமிழக செய்திகள்

மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் இலவச திருமணம்

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் இலவச திருமணம் நடைபெற்றது.

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் தமிழக அரசின் சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு கட்டில், பீரோ, தலையணை, மிக்ஸி, 4 கிராம் தங்கம், கைக்கடிகாரம் மற்றும் சீதன பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை பிரச்சன தெட்ஷண நாடார் சங்க பிரதிநிதி ஜெகதீசன் மற்றும் கட்சி பிரமுகர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.