தமிழக செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

வெங்களாபுரம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாமை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் பகுதியில் உள்ள சித்ரா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.சின்னதுரை வரவேற்றார். டி.ஜெயசித்ரா முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

முகாமில் டாக்டர் சி.யுகசூர்யா பொதுமக்களுக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு மற்றும் பொது வியாதிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், எங்களது மருத்துவமனை சார்பில் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறோம். தொடர் நிகழ்ச்சியாக இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம் என்றார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சூரவேல் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT