தமிழக செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி அருகே குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சீர்காழி சட்டமன்ற தொகுதி மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அறிவழகன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் பூபேஷ் தர்மேந்திரா முன்னிலை வகித்தார். தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி, சட்டமன்றத் தொகுதி துணை அமைப்பாளர்கள் துரை வாசு லட்சுமணன், செவிலியர் பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்