தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்களை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

தினத்தந்தி

திருக்கடையூர்:

திருக்கடையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், செம்பனார்கோவில் தி.மு.க.மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். இதில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்து கொண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 220 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள், மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். மேலும் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு வருகை தந்த மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருமால் நன்றி கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை