தமிழக செய்திகள்

ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள்... நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம்

நண்பர்கள் இருவர் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

'காதல் தேசம்' பட பாணியில் ஒரே பெண்ணை காதலித்து வந்த இரு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் சபரி. இவரும் இவரது நண்பரான ஜோஷி என்பவரும் 'காதல் தேசம்' பட பாணியில் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஒருவரை ஒருவர் அறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில், இரணியல் பகுதியில் வைத்து நடுரோட்டில் மோதி கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்