தமிழக செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாசனத்துக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பவானி ஆற்றில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மேலும் பாசனப்பகுதியில் பரவலாக மழை பெய்து உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 67.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 261 கன அடி தண்ணீர் வந்தது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை