சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருகின்ற மகா சிவராத்திரி மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சென்னை-செங்கோட்டை
* சென்னை எழும்பூரில் இருந்து மார்ச் 4, 11, 18, 25-ந் தேதிகளில் இரவு 8.40 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06011) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக 12, 19, 26-ந் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06012) இயக்கப்படுகிறது.
* சென்னை சென்டிரலில் இருந்து மார்ச் 5, 12, 19, 26-ந் தேதிகளில் இரவு 7 மணிக்கு நாகர்கோவில் நோக்கி சிறப்பு கட்டண ரெயில் (06007) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக 6, 13, 20, 17-ந் தேதிகளில் மாலை 5 மணிக்கு நாகர்கோவில்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண ரெயில் (06008) இயக்கப்படுகிறது.
சென்னை-நெல்லை
* சென்னை எழும்பூரில் இருந்து மார்ச் 15, 22, 29-ந் தேதிகளில் இரவு 10.20 மணிக்கு நெல்லை நோக்கியும் (06001), மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 17, 24, 31-ந் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சென்னை நோக்கியும் (06002) சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகிறது.
* சென்னை சென்டிரலில் இருந்து மார்ச் 1, 8, 15, 22, 29-ந் தேதிகளில் இரவு 8.40 மணிக்கு எர்ணாகுளம் நோக்கியும் (06005), மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து 3, 10, 17, 24, 31-ந் தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னை நோக்கியும் (06006) சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை-கொல்லம்
* சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே வருகிற 28-ந் தேதி முதல் மார்ச் 29-ந் தேதி வரை (பிப்ரவரி 8, 15 மார்ச் 20-ந் தேதிகள் தவிர) மாலை 5 மணிக்கு வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (06029) இயக்கப்படுகிறது.
* சென்னை எழும்பூர்-கொல்லம் சுவிதா ரெயில் (82629) பிப்ரவரி 8-ந் தேதி மாலை 5 மணிக்கு இயக்கப்படுகிறது. மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.