தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஜன.2ஆம் தேதி முதல் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஜன.2ஆம் தேதி முதல் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும், ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆகையால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசிக்கு தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜன.2ஆம் தேதி முதல் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கவும் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை