தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையிலிருந்து அக்.1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையிலிருந்து அக்.1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையிலிருந்து அக்.1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 2020-2021 ஆம் ஆண்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கர், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கர், ஆக மொத்தம் 10 ஆயிரத்து 860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு கோமுகி நதி அணையிலிருந்து அக். 1 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்