சென்னை
கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை இருக்கும் என்றும் வானிலை மையத்தால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை . புயல் குறித்து அரசு விடுத்த எச்சரிக்கை மீனவர்களுக்கு போய் சேராததால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. ராணுவம், கப்பல் படை, மீன்வளத்துறை மூலம் தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.