தமிழக செய்திகள்

தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்த வியாபாரி சாவு

கடமலைக்குண்டு அருகே தடுப்பச்சுவரில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது 60). இவர், கடமலைக்குண்டு பகுதியில் சில்லறை முறையில் எண்ணெய் விற்பனை செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி தமிழன், வியாபாரத்தை முடித்துவிட்டு கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் இடையே வைகை ஆற்றங்கரை ஓரம் உள்ள தடுப்புச்சுவரில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழ விழுந்தார். இதில் பின்கழுத்தில் அடிப்பட்டதில் அவருக்கு கை, கால்கள் செயலிழந்தது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தமிழன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்