தமிழக செய்திகள்

திருப்பதி கோவிலில் இருந்து வந்த புடவையில் காட்சியளித்த ஆண்டாள்

திருப்பதி கோவிலில் இருந்து வந்த புடவையில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பிரம்மோற்சவ விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏழுமலையான் அணிந்து கொண்டு கருடசேவையின் போது வீதி உலா வந்தார்.

திருப்பதி காவில் சார்பில் ஆண்டாளுக்கு மரியாதை செய்யும் வகையில் பட்டுப்புடவையை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்தனர். அந்த பட்டுப்புடவைக்கு ஸ்தானிகர் ரமேஷ் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு மாலையில் ஊஞ்சல் சேவையின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வந்த பட்டுப்புடவை ஆண்டாளுக்கு சாத்தப்பட்டது. ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளிய இந்த காட்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு