தமிழக செய்திகள்

உடல் பருமனாக இருந்ததால் விரக்தி: 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை...!

திருச்சியில் உடல் பருமனாக இருந்ததால் விரக்தி அடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மாவட்டம் அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணி- ஷர்மிளா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சிவானி என்ற 13 வயது மகள் உள்ளார். சிவானி அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சிவானி உடல் பருமனாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவானி உடல் எடையை குறைக்க பல்வேறு சிகிச்சை முறைகளை பின்பற்றி வந்துள்ளார். இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், உடல் பருமனாக இருக்கிறது என விரக்தி அடைந்த சிவானி வீட்டின் தனி அறையில் தூக்கு பேட்டு தற்கெலை செய்து கெண்டார். இதையடுத்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய பேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறப்பதற்கு முன்பாக அந்த மாணவியின் தொலைபேசியில் தற்கொலை செய்வது எப்படி என்பது தெடர்பான வீடியோக்களை அவர் பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

உடல் பருமனாக இருந்ததால் விரக்தி அடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கு பேட்டு தற்கெலை செய்து கெண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை