தமிழக செய்திகள்

நாளை முதல் முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.

கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர். ஊருக்கு செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது.

அதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியான பெருங்களத்தூரில் பொதுமக்கள் குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பெரும்பாலானோர் பேருந்துகள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. அதனால், இன்று கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் இருந்து 1.33 லட்சம் பயணிகள் வெளி மாவட்டங்களுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது.

ஏராளமான மக்கள் இருசக்கர வாகனங்களிலும் பயணித்து வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.