கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் நாளை மாலை 5 மணி முதல் வரும் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேறு எந்த நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. ஊரடங்கினை மீறும் வகையில் தேவையின்றி வெளியே நடமாடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும், வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பர். உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது எனவும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.