தமிழக செய்திகள்

முப்பெரும் தேவியர் கோவிலில் பவுர்ணமி பூஜை

புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் கோவிலில் நேற்று ஆனி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு நடந்தது.

குருநாதர் சக்தியம்மா பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து உலக நன்மைக்காக பால், தயிர், மஞ்சள் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

முப்பெரும் தேவியர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை