சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் கோட்டம் 110-க்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயானபூமியின் மின் தகன மேடையை திரவ பெட்ரோலிய வாயு தகனமேடையாக மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் 3 மாதக் காலங்களுக்கு இந்த மயானபூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நுங்கம்பாக்கம் மயானபூமியில் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஜூலை 14-ந்தேதி வரையில் இந்த மயானபூமி இயங்காது. எனவே மேம்பாட்டு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.