கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 16,813 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 20-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,08,838 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 358 பேர் (அரசு மருத்துவமனை - 223 பேர், தனியார் மருத்துவமனை - 135 பேர்) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 20,91,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 32,049 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,236 பேரும், ஈரோட்டில் 1,390 பேரும், சென்னையில் 1,223 பேரும், திருப்பூரில் 897 பேரும், சேலத்தில் 945 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 102 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 1,88,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு