தமிழக செய்திகள்

கஜா புயலில் சிக்கி பலியான பரிதாபம் காரைக்காலில் கரை ஒதுங்கிய மான்கள், குதிரைகளின் உடல்கள்

காரைக்கால் கடல் பகுதியில் கஜா புயலில் சிக்கி பலியான மான்கள், காட்டுப்பன்றிகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளின் உடல்கள் கரை ஒதுங்கின.

தினத்தந்தி

காரைக்கால்,

வங்க கடலில் உருவான கஜா புயல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பலத்த சேதத்தை உண்டாக்கியது. புயலினால் ஆயிரக்கணக் கான மரங்கள், மின்கம் பங்கள் சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகளும் பறந்தன. 150-க்கும் மேற்பட்ட பட குகள் சேதம் அடைந் தன. இந்த கஜா புயல் விலங்குளையும் விட்டு வைக்கவில்லை.

காரைக்கால் கடலோர கிராம பகுதிகளில் ஏராளமான மான்கள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள், குதிரைகள், நரி மற்றும் பறவை ஆகிய விலங்குகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதைப் பார்த்து மீனவ மற்றும் கடலோர பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த கால்நடைத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கடலோர பகுதியில் பிண மாக கரை ஒதுங்கிய 51 மான்கள், 11 காட்டுப்பன்றிகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளின் உடல்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அந்த விலங்குக ளின் உடல்கள் கடலோர பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

இந்த விலங்குகள் கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை காடுகளில் இருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து