தமிழக செய்திகள்

கஜா புயல்; புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று புதுச்சேரி, காரைக்காலில் கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் நாளை தகுந்த காரணமின்றி அரசு விடுப்பு எடுப்பர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலை கழகம் சார்பில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்தமான் நிகோபர் தீவுகளிலும் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது