காரைக்குடி செல்லப்பன் வித்தியா மந்திர் பள்ளியில் மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டி நடைபெற்றது. இதில் தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் நெப்போலியன் கலந்து கொண்டு பரிசை பெற்றார். இவரை வேளாண்மை துறை மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவர் கடந்த மார்ச் மாதம் சண்டிகரில் நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.