தமிழக செய்திகள்

காந்தியடிகள் நினைவு தினம்: சென்னை கோட்டையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ந் தேதி, இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

இதற்காக அங்குள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஏராளமான அளவில் வந்திருந்தனர்.

காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபு, நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தனி மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். அதை அங்கிருந்த அனைவரும் திரும்ப கூறினர்.

தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ, சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை