மதுரை,
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக போராடிய அகிம்சைவாதியான மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை மூட மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும். இதேபோன்று நினைவு தினத்திலும் அவற்றை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.