தமிழக செய்திகள்

விநாயகர் சிலை கரைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

* அனுமதித்த நாளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும்.

* அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.

* 4 இடங்களில் கரைக்க 17 வழித்தடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும்.

* சிலை ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை மீறினாலோ, அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னை நகர எல்லையில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 15-ல் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* சிலை கரைப்புக்கு 16,500 காவல்துறையினர், 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து