தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது - மாவட்ட கலெக்டர்

கிருஷ்ணகிரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த நிலையில் , கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது . விநாயகர் சிலையுடன் 24 மணி நேரமும் 2 பேர் இருக்க வேண்டும் என விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை வைக்கும் அமைப்பினருக்கு மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு