தமிழக செய்திகள்

காசுக்காக கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

காசுக்காக கூடுவது கும்பல் என்றும், லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இன்று தொடங்கி உள்ளார். மதுரையில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் கமல்ஹாசனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் காசுக்காக கூடுவது கும்பல் என்றும், லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், காசுக்காகக் கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். எதுவும்_தடையில்லை. சீரமைப்போம்_தமிழகத்தை என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து