தமிழக செய்திகள்

ராமநாதபுரம்: பவளபாறையில் தேங்கிய கழிவுகள் கடலோர காவல்படையினரால் அகற்றம்

ராமநாதபுரம் அரியமான், பிறப்பன்வலசை கடல் பகுதியில் பவளபாறையில் தேங்கிய கழிவுகள் கடலோர காவல்படையினரால் அகற்றப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

'புனித் சாகர் அபியான்' என்ற பெயரில் கடற்கரைகளை பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப்பொருட்களில் இருந்து தூய்மையாக்குவதற்கான நாடு தழுவிய பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படை சார்பில் பிறப்பன்வலசை, அரியமான் ஆகிய இடங்களில் உள்ள பாக்ஜல சந்தி கடல் பகுதியில் பவளபாறைகளில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டன.

இந்த பணியில் கடலோர காவல்படை வீரர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி ஈடுபட்டனர். இதன்மூலம் பவளபாறையில் தேங்கி கிடந்த ஏராளமான கழிவுகள் அகற்றப்பட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்