தமிழக செய்திகள்

11 ஊராட்சிகளுக்கு குப்பை அகற்றும் வாகனம்

ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தில் 11 ஊராட்சிகளுக்கு குப்பை அகற்றும் வாகனம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வழங்கினார்

தினத்தந்தி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பில் குப்பைகளை ஏற்றிச்செல்லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான வசந்தம் க.கார்த்திகேயன் கலந்து கொண்டு மேலப்பழங்கூர், பாக்கம், கடம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மின்கல சுமைதூக்கும் வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு