தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர்.சிலைக்கு முருக்கோடை ராமர் மாலை அணிவிப்பு

ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு முருக்கோடை ராமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளராக முருக்கோடை ராமரை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிய மாவட்ட செயலாளருக்கு ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், அ.தி.மு.க. மாவட்ட வக்கீல் அணி செயலாளரும், முன்னாள் அரசு வக்கீலுமான டி.கே.ஆர்.கணேசன், முன்னாள் அரசு வக்கீல்கள் ஜெயராமன், தங்கத்துரை, மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை