தமிழக செய்திகள்

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினத்தந்தி

தந்தை பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுத்தறிவாளர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அரியலூரில் தி.க. சார்பில் கோவிந்தசாமி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மாணவர்கள் அமைப்பினர் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயங்கொண்டத்தில் தி.க. சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியார் சிலைக்கு ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.இலக்கியதாசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்