காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சுதந்திர போராட்ட வீரருமான திருமயத்தை சேர்ந்த தீரர் சத்தியமூத்தியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை கோர்ட்டு வளாகம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.