ஸ்ரீவைகுண்டம்:
நவதிருப்பதிகளில் மூன்றாம் திருப்பதியான திருப்புளியங்குடி பெருமாள் கோவிலில் பவுத்திர உற்சவத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது. இதையொட்டி விஸ்வரூபம், திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாஹூதி, நாலாயிர திவ்யபிரபந்தம், சாத்துமுறை, தீர்த்தம், சாயரட்சை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இரவில் சுவாமி காய்சினி வேந்தப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.