தமிழக செய்திகள்

கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த கஜா புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இன்று மாலை இந்த புயலானது, . பாம்பன் - கடலூர் இடையே கரையைக்கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து