தமிழக செய்திகள்

பொது பேரவை கூட்டம்

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.

தினத்தந்தி

தளி

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி நாயப் சுபேதார நடராஜ், பிளைட் லெப்டினட் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் இலவச யூனிபார்ம் சர்வீஸ் மற்றும் போட்டித் தேர்வுபயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக குறை தீர்ப்பு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ராணுவ நலச்சங்க பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து