தமிழக செய்திகள்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தேர்வு தொடங்கியது. இதில் பிளஸ்-2 வகுப்பிற்கு கடந்த 28-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு 30-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்பிற்கு 31-ந்தேதியும் தேர்வுகள் முடிவடைந்தன. இதை தொடர்ந்து தேர்வு மையங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராத காரணத்தால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு