தமிழக செய்திகள்

‘பிட் இந்தியா’ ஓட்டத்தில் ரெயில்வே பொது மேலாளர் மனைவியுடன் பங்கேற்றார்

‘பிட் இந்தியா’ ஓட்டத்தில் ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தனது மனைவியுடன் பங்கேற்றார்.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் கடந்த 15-ந்தேதி 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த இயக்கத்தில் கலந்துகொள்பவர்கள், உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே, எந்த நேரத்திலும் சுதந்திரமாக ஓடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் தெற்கு ரெயில்வேயும் இந்த இயக்கத்தில் தற்போது இணைந்துள்ளது. தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ரெயில்வே ஊழியர்கள் அனைவரும் இதில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தியதுடன், தனது இல்லத்தில் தனது மனைவி பினா ஜானுடன் பிட் இந்தியா சுதந்திர ஓட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டத்திலும் ரெயில்வே பணியாளர்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு சுதந்திர ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்