தமிழக செய்திகள்

தமிழ்மொழி இடம் பெற்ற முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்

தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தமிழ்மொழி இடம் பெற்ற முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் புறப்படும் மற்றும் சேரும் இடம் குறிப்பிடப்படும் என்று ரெயில்வே மந்திரி தெரிவித்தார். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வேக்குட்பட்ட சென்னை சென்டிரல், திருச்சி, சேலம், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் அந்த திட்டம் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் இன்று(சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்பதிவில்லா டிக்கெட் பெறும் முறை (யு.டி.எஸ்.), தானியங்கி டிக்கெட் பெறும் முறை (ஏ.டி.வி.எம்.), காசை செலுத்தி டிக்கெட் எடுக்கு முறை (சி.ஓ.டி.வி.எம்.) ஆகிய முறைகளில் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் 5-ந்தேதி (இன்று) முதல் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளில் புறப்படும் மற்றும் சேரும் இடம் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் குறிப்பிடப்பட்டு இருக்கும். திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ரெயில் நிலையங்களில் மட்டும் மலையாள மொழி இடம் பெற்று இருக்கும்.

பல ரெயில் நிலையங்களில் பல்வேறு மாடல் டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் இருப்பதால், சில ரெயில் நிலையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த இடங்களிலும் படிப்படியாக அந்த மாநில மொழிகள் இடம்பெற வழிவகை செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை