தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு பரிசு

மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

செங்கோட்டை:

செங்கோட்டை சுலைமான் நபி ஜூம்மா பள்ளிவாசலில் மிலாது நபி விழா நடந்தது. பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது பட்டாணி தலைமை தாங்கினார். ஹாஜி சலீம் முன்னிலை வகித்தார். நபிகள் வரலாறு குறித்து காரி இஸ்மாயில் உலவி சிறப்புரையாற்றினார். பின்னர் மதரஸா மாணவ- மாணவிகளுக்கு குர்ஆன் ஓதும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி ஜமாத் கமிட்டி துணைத்தலைவர் உள்ளிமுகம்மது இஸ்மாயில் பரிசு வழங்கினார். இதையடுத்து பள்ளி தலைமை இமாம் செய்யது சுல்தான் பைஜி துஆ ஓதினார். நிகழ்ச்சியில் பள்ளி ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார் கலந்து கொண்டனர். முடிவில் ஹாஜி சர்தார் நன்றி கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்