தமிழக செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவா வேல்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவா தங்கராஜ், தலைமை ஆசிரியா வீ.எஸ்.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. பட்டதாரி ஆசிரியை மாலீஸ்வரி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா இசக்கிதுரை பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியா ஜோசப் ராஜசிங் வாழ்த்துரை வழங்கினார்.

பின்னா அக்டோபர் மாதத்தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

பின்னா தமிழக அரசின் அறிவுரையின்பேரில் குப்பாச்சிகலு ( (சிட்டுகுருவி) என்ற சிறார் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. முடிவில் பட்டதாரி ஆசிரியை ஜெசி சாரதா சலோமி நன்றி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்