தமிழக செய்திகள்

விஷம் குடித்து சிறுமி தற்கொலை

கூடலூரில் விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

கூடலூர்

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளி வயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் கேத்தி (வயது 15). இவருக்கு வயிறு வலி இருந்து வந்தது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி வயிற்று வலியால் அவதி அடைந்தார். அப்போது மனமுடைந்த கேத்தி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று கேத்தி இறந்தார். இதுகுறித்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்