தமிழக செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை, 

புதுக்கடையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீனவர்

புதுக்கடை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஷான் (வயது33), மீனவர். இவருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (27) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று ஷாலினி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உருக்கமான கடிதம்

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனையிட்டனர். அப்போது, ஷாலினி எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், 'இந்த உலகத்தில் வாழ பிடிக்காததால் சாகிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு