தமிழக செய்திகள்

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன? போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பிரியா (வயது 23). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட பிரியாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் திருக்கோவிலூர் கோட்டாட்சியரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை